Saturday, 19 January 2013

முதல் கல்லூரி டூர்

டுவுல கொஞ்சம் ப்ளாக் போஸ்ட்டை காணோம்



கொஞ்சம் இல்லை கொஞ்சம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ப்ளாக் எழுதுறேன்.வேலைப்பளுவும்,சோம்பேறித்தனமும் காரணங்களாக காட்டிவிட்டு கல்லூரி நினைவுகளோடு  கொஞ்சம் பின்னோக்கி பயணிக்கலாமா?

     அந்த மறக்க முடியாத காலேஜ் டேஸ் முதல் சுற்றுலாவை பத்தி தான்   இன்றைய பதிவு..

மூன்று நாட்கள் கொடைக்கானல் டூர் ..
ஹ்ம்ம் எல்லாருக்கும் இதே சாய்ஸ் ..
ஆர்கனைஸ் பண்ணும் குழுவில் நானும் ஒருவன்..காரணம் என்னோட நேட்டிவ் வத்தலக்குண்டு (கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள ஊர்) என்பதால்.
சென்னையில் இருந்து கொடைரோடு வரை ரயில் பயணம்..
கொடைரோடில் இருந்து பஸ்ஸில் கொடைக்கானலுக்கு


..ஓகே டன்!


லெக்சரர்ஸ் யாரை அழைத்து செல்லலாம்?

மாணவர்கள் அனைவரின் ஏகோபித்த சாய்ஸ் பயோகெமிஸ்ட்ரி மேடம் தான்!
அவ்வளவு ரசிகர்கள் அவங்களுக்கு..முக்கியமா பசங்களுக்கு !

இன்னொரு male staff ..வேற யார் நம்ம Dr.ஷங்கர் சார்.. இதுவும் மாணவர்களின் ஏகோபித்த
சாய்ஸ் தான் காரணம் அவர் நாங்க பண்ணும் லூட்டிகளை கண்டும் காணமல் போகும் மா மனிதர்!
எங்களை வாட்டி எடுக்க நினைத்தால் அவர் வகுப்பில் கேட்கும் ஒரே கேள்வி "பாலியாக்ரிலிக் இட்டகொனிக் ஆசிட்" பத்தி தான் !

இப்படியாக ப்ளான் போட்டு இனிதே துவங்கியது எங்கள் கொடைக்கானல் சுற்றுலா..
பஸ்,தங்கும்விடுதி ஏற்பாடுகளை கவனிக்க
நான் மட்டும் ஓரிரு தினங்களுக்கு முன்னரே சென்று சென்றுவிட்டேன்..

மொத்த வகுப்பில் அஞ்சு பேர தவிர எல்லாரும் டூர் வர சம்மதம்..
சென்னை எக்மோரில் இருந்து ட்ரெயின் கிளம்பியாச்சு..
அதிகாலை 5மணிக்கு வந்து கொடைரோடு சேரும்.

நான் ரெடியா பஸ் எடுத்துட்டு போயி கொடைரோடு ரெயில்வே ஸ்டேஷனில் நிக்கணும்.

முதல் கல்லூரி டூர் .. முந்திய இரவு இந்த எக்சைட்மெண்ட்ல தூக்கமே வரல..
அங்கே நம்ம ஃ பிரெண்ட்ஸ் எல்லாம் இந்நேரம் ஜாலியா ட்ரெயினில் லூட்டி அடிச்சுட்டு வருவாங்க நான் மட்டும் அந்த ட்ரெயின் ஜர்னி மிஸ் பண்றேனே.. :(

இப்படியாக கழிந்தது அன்றைய இரவு.. அதிகாலை அலாரம் அடிப்பதற்கு
முன்னரே எழுந்து ரெடி ஆகி பஸ்ஸ கெளப்பி கொடை ரோடு ரெயில்வே ஸ்டேஷனுக்கு நேரத்துக்கு போய் சேர்ந்தாச்சு..

கண்ணில் தெரியும் தூரத்தில் ட்ரெயின் வந்து கொண்டு இருந்தது.. பிளாட்பார்ம் நோக்கி வரும்போதே ஒரே அமர்க்களம்.. எல்லாரும் கூச்சலும் கொண்டாட்டமுமாக .. அஞ்சுமணிக்கு அந்த ஸ்டேஷனே அப்படி ஒரு விழாக் கோலம் பூண்டதில்லை போலும்.. எல்லாம் ஒரு மாதிரியா வெறிச்சு பார்த்தானுங்க..

ட்ரெயினில் வந்த நண்பர்கள் 52 பேரும் என்னை வரவேற்தது போல அம்புட்டு ஆரவாரம். அம்புட்டு மகிழ்ச்சி..

எல்லாரும் பஸ் ஏறிய சில நிமிடங்களிலேயே பாடல்கள் கும்மாளம் ஆரவாரத்துடன் கொடைகானல் நோக்கி பேருந்து பயணம்

இன்னும் சொல்ல நெறையா இருக்கு.. அடுத்த போஸ்டுல தொடரும்...


Friday, 29 June 2012


காலேஜ் நாளில் கட் அடிச்சிட்டு
சினிமா போறது ஒரு தனி என்ஜாய்மென்ட் தான். அதுக்கு நிகர்  எதுவுமே இல்லை.சில ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும்  அதே  படங்களை  டிவியில் பார்க்கும்போது அப்போ அடிச்ச லூட்டிகளும் கலாட்டாவுமே  நியாபகத்துக்கு வருது...


முதலாம் ஆண்டில் மட்டும்  குறிப்பாக சொல்லப்போனால் திங்கக்கிழமைகளும்  சனிக்கிழமைகளுமே எங்களின்  சினிமா நாட்கள் ..
அதுல சனிக்கிழமை" மாஸ் கட்" அடிச்சுட்டு போற நாள்.. திங்கக்கிழமை "சைலன்ட்"  எஸ்கேப் ஆகும் நாள்..


திங்கக்கிழமை இந்தி படங்களின் "எக்ஸ்க்ளுச்சிவ் டே"...
அதுவும் மேட்னி ஷோ தான் எங்க சாய்ஸ் ..காரணம் அதிகமான சேட்டு பொண்ணுக அந்த ஷோவுக்கு  தான் வருங்க.(****படத்தின் பெயர் கூட தெரியாம உள்ள போய் உட்கார்ந்துட்டு சைட் அடிச்ச சம்பவங்களும் இங்கு கூடுதல் தகவலாக பதிகிறேன்)..
 கவுண்டமணி பாணியில் ...ஸ்டேட்டவிட்டு  சேட்டு சேட்ட விட்டு ஸ்டேட்டு.

பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமைகள்  துணி துவைப்பதிலும்,தூங்குவதிலும், கிரிக்கெட்  விளையாட்டிலுமே கழியும்.திங்கள் காலை வீக்லி டெஸ்ட் . அதை எழுதிட்டு ரிலாக்ஸ் பண்ண தான்   மேட்னி கிளாஸ் கட் மூவீஸ்!

வெரைட்டி வெரைட்டியான  ஜிலு ஜிலு சட்டைகளும் பளீர் கலரில் கேன்வாஸ் ஷூவும்.. மெலடி தியேட்டர் வாசல் பீடாவும் தான் எங்களின் அன்றைய (சேட்டுபொண்ணுங்களுக்கான எக்ஸ்க்ளூசிவ்) கெட்டப்ப் .
 

இப்படி திங்கக்கிழமை நாங்க போற படங்களுக்கு எங்களோட பொண்ணுங்க வர மாட்டாங்க...திங்கக்கிழமை கட் அடிக்க கூடாதாம்.!!! காரணம் அவங்க படிப்ப்ஸ் /கடமை உணர்ச்சி / சின்சியாரிட்டி இப்படி எதுன்னாலும் சொல்லிக்கலாம்  ... ஆனால் சனிக்கிழமைகளில் மாஸ் கட் அடிக்கும் போது அவங்களும்  வருவாங்க..



வருத்தப்படாத  வாலிபர் சங்கம் !
சனிக்கிழமைகளில் நாங்க அடிக்கும் கட் சற்று வித்தியாசமானது... அன்று அரை நாள் மட்டுமே வகுப்புகள் இருக்கும்..  காலை  8 மணிக்கு ஆரம்பமாகும் வகுப்புகள் அடுத்தடுத்து காலை பத்து  பதினொரு மணிக்குள் கிளாஸ் அட்டன்டன்ஸ் முடிந்து  ஒவ்வொருவராக அல்லது குழுவாக  பாராளுமன்ற எம். பிக்களை போல வெளிநடப்பு செஞ்சுருவோம்...

அந்த அபூர்வமான மாணவ பருவத்தில் மட்டும் தான் இதுபோன்ற அறிய நிகழ்சிகள் நடக்கும்..

1)பிளானே பண்ண மாட்டோம் ஆனால் கரக்ட்டா  தியேட்டர் வாசலுக்கு ஆஜர் ஆயிடுவோம்..

2)கும்பலோடு போவதால் யார் யாருக்கு டிக்கட் எடுத்தார்கள் என்ற கணக்கும் தெரியாது.. ஆனால் படம் ஆரம்பித்து இண்டெர்வல் வரையிலும் எங்க கேங் வந்துட்டே இருப்பானுங்க...


3)என்ன தான் மணிரத்னம் படத்தின் இருட்டாக இருந்தாலும் ஷார்ப்பா எங்க காலேஜ் கேங் இருக்கும் இடத்தை கண்டுபிடிச்சுருவோம்..


4)யாருக்கு எந்த பொண்ணு  மேல ஒரு அது./ ஒரு லவ்வு/ ஒரு சாப்ட் கார்னர் என்பதை சினிமா தியேட்டர்களில் கணித்து விடலாம் (அடுத்த ஷோவில் அந்த ஜோடிகள் மட்டும் தனியாக எஸ்கேப் ஆயிடுவாங்க)

****முந்தைய ஷோ முடிந்து வெளியில் வரும் காதல் ஜோடிகளையும் சில சமயம் ஸ்பாட் பண்ணிடுவோம்.. ஆல்பர்ட் தியேட்டரில் நடந்த ப்ளாஷ் பேக் இது...


கடலை உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது


(நான் மட்டும் கல்லூரி காதல் வலையில் சிக்கல... ஆனால் கடலை சாகுபடியில் கவனம் செலுத்தினேன் என்பது வரலாற்று ஆசிரியர்களின் ஏடுகளில் இருக்குது அவ்வ்வ்வ் )

















5)ஸ்மார்ட் போன் இருக்காது ஆனாலும் இருக்கும் போன் வச்சு ஸ்மார்ட்டா சீன் போடுவோம்



 

 



6)ஒரு பாப்கார்ன் பாக்கெட்டை ஒன்பது பேர் சாப்பிட்டு மகிழ்ந்தது  அப்போது தான்..

7)அட்வான்ஸ் புக்கிங்  பண்ணவே மாட்டோம்... ஆனால் எப்போ போனாலும்   எப்படியும் டிக்கட் கெடச்சுரும்
 

8)சிலநேரங்களில்  மொக்கை படத்தையும் தியேட்டர்ல போயி
பார்த்து இருப்போம் ஆனா டிவில இப்போ  பார்க்கும் போது தான்உணர முடியுது     எவ்வளவு ரண மொக்கை  என்று ...

ஆயிரம்தான் டெக்னாலஜி  மாறினாலும்  சொகுசான   முறையில் இன்றைய தேதியில் படங்களை பார்த்தாலும் அந்த மாணவ பருவத்தில் லூட்டி அடிச்சிட்டே பார்த்த அந்த அனுபவம் மீண்டும் கிடைக்கவே செய்யாது..
 



................................................இன்னும் தொடரும்..



Sunday, 17 June 2012

" அழகப்பன் மாமா

ஜாலியாக போய்கொண்டு இருந்த  அந்த ஹாஸ்டல் நாட்களில்  இப்படி ஒரு திருட்டு நடக்கும் என்று நினைத்து கூட பார்க்கல.
 அந்த சம்பவத்தை மறக்கவேமுடியாது..ஆமாம்.. இன்னைக்கும் நியாபகம் வச்சுருக்கோம்...
கிழக்கு கடற்கரை  சாலையில் உள்ள எங்கள் கல்லூரி விடுதி அருகில் குடியிருப்புகள் மிகக்குறைவே.. காலை நேரத்தில் தான்  இந்த திருட்டு அரங்கேறியது .அதுவும் நாங்க எல்லாரும் விடுதியில் இல்லாத நேரம் காலேஜ் நேரம் தான் என்பதை நன்றாக தெரிந்துகொண்ட  ஒருவன் பகலிலேயே  கொள்ளை அடிக்க ஊடுருவினான்..

காலேஜ் கேண்டீனில் எங்களின் அரட்டையை அந்த திருடன்  கவனித்து இருக்க கூடும்..அன்று எங்களோடு இருந்த அழகப்பன் என்ற மாணவனை பத்தி  பேசிக்கொண்டு இருந்தோம்.. அதை கவனித்த திருடன் எங்களிடம் வந்து" சார் நான் டாக்டர் அழகப்பனை பார்க்கணும்..அவரின் மாமா என்றான்"
.."இதோ இவர்தானே அழகப்பன்"

 என்று திருடனுக்கு அழகப்பனை அறிமுகம் செஞ்சுவச்சான் எங்களோடு  இருந்த மதுசூதனன் என்ற மேதாவி..


உடனே அந்த திருடன் அழகப்பனிடம்.".என்னை தெரியுதா நான் உன்னோட கரூர் மாமா  ..உங்க அப்பா தான் இங்கே அனுப்பி வச்சார் உன்னை போய் பார்த்துட்டு வரசொல்லி என்று நைசாக பேச்சு கொடுத்தான்"...


அடடா நமக்காக கரூரில்  இருந்து ரயிலேறி பார்க்க வந்துருக்காரே என்ற மகிழ்ச்சியில் அழகப்பனும் அந்த திருடனை எல்லாரிடமும் அறிமுகம் செய்து வைத்தான்.. "இவர் கரூர் காரர் இன்னொரு கரூர் காரர் குளிக்க போயி இருக்கார்.. எல்லாம் நம்ம ஊரு தான்" இவ்வாறாக  உற்சாகமாக ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொண்டு  உரையாடல்கள் தொடர்ந்தன..

"அடடா காலேஜ் நேரத்துல வந்து இருக்கீங்களே மாமா.. சரி ஹாஸ்டல் ரூமில் தங்கி இருங்க  நாங்க கிளாஸ் போயிட்டு வரோம்'... என்று ரூம் சாவியை கொடுத்து ரெஸ்ட் எடுக்க சொன்னான் அழகப்பன்..

அன்று முதலாம் ஆண்டு மாணவர்கள் யாரும் ஹாஸ்டலில் இல்லை.கல்லூரி
நேரம் என்பதால் எல்லாரும் தவறாம காலேஜ் வகுப்புக்கு ஆஜர் ஆயிட்டோம் .

உண்மைய சொல்லப்போனா கட் அடிக்க  அப்போ நாங்க யாரும் பழகல.

மதிய நேரம் உணவு இடைவேளை ..."அடடா மாமா வேற பசியா இருப்பார் அவர வெளியில கூப்ட்டு போயி சாப்பாடு வாங்கி தரனும் "என்று சொல்லிக்கொண்டே அழகப்பனும் எங்களோடு விடுதிக்கு வந்தான்..
வந்து பார்த்தல் அறை வெளியில் பூட்டப்பட்டு இருந்தது..

மாமா,,... மாமா .சத்தம் போட்டோம்..உஹும்..மாயம் .. மாமா காணவில்லை..

ரெண்டு மணி நேரமாக வராண்டா பால்கனியில்  சுத்திகிட்டு இருந்தோம்.. அட "அவர் வெளில சாப்ட போய் இருப்பார் பா.".என்றான் ஒருத்தன்..
ஒருவேளை திருடனா இருப்பானோ..அப்போ தான் ஒருத்தனுக்கு சந்தேகம் வந்ந்தது..
"டேய் அழகப்பா... இதுக்கு முன்னாடி அவர நீ பார்த்து இருக்கியா?

அப்போ தான் மெதுவா உண்மை வெளியில வந்துச்சு..அழகப்பன் சொன்னான்.."இல்லடா அவன் தான் எங்க அப்பாவ தெரியும் அவர் அனுப்பினார்ன்னு சொன்னான்  அத நம்பி நான் வேற ஏன் ரூம் சாவிய குடுத்துட்டேனே"  என்றான் தலையில் கையை வச்சுகிட்டு






"ஹ்ம்ம் சரி சரி ஆனது ஆச்சு.. இப்போ ரூம் பூட்டஉடச்சு கதவ தொறங்க ..
அண்டர் டாயராவது மிஞ்சி இருக்குதா ன்னு பார்க்கலாம்" என்று சரவணன் சொல்ல   எல்லாரும் ஒரு முடிவெடுத்து இதுக்கு மேல காத்திருக்க வேணாம் என்று ரூம் பூட்டை உடைத்தோம்..

*டணால் * டணால்* டணால் மூன்றே அடியில் சுத்தியலை கொண்டு வெற்றிகரமாக உடைக்கப்பட்டது ரூம் பூட்டு..

உசிலை மணி குரலில் ..இதுல ஒரு தொழில் ரகசியம் என்னான்னா மொயலாளி இந்தபூட்டு திருட வந்த அழகப்பன்  மாமாவின் சொந்தப்பூட்டுஅம்புட்டு ஸ்ட்ராங்  !
 
உள்ளே நுழைந்தோம்..  ரூமில் உள்ள அனைத்து  பொருட்களும் கலைத்து போடப்பட்டு இருந்தது ..அலமாரியில் இருந்த  Rs 4500பணம் அம்பேல்...


சிங்கிளா வந்து செதரடிசுட்டு போயிட்டான் அந்த பெயர் தெரியாத அழகப்பன் மாமா ....


அழகப்பனை காமெடியனாக பார்பதா இல்லை அந்த  திருடனை அழகப்பனுக்கே அறிமுகம் செய்து வைத்த மதுசூதனனை காமெடியனாக பார்பதா ஆக மொத்தம் பறிபோனது ரூபாய் நாலாயிரத்து ஐநூறு...


இதை தான் அன்றே எம் ஜியார் பாடிட்டு போயிட்டாரு" திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது"..

வாழ்க்கையில் மாறாமல் இருப்பது மாற்றம் மட்டும் இல்லை ஏமாற்றமும் தான் .

எல்லாரும் எல்லா கட்டதிலும் ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்றத்தை சந்திக்கதானே செய்கிறோம். 







 





Sunday, 10 June 2012

தி /சிறந்த முறை தேர்வு




 ப்ளஸ் டூவுக்கு பின்னால் கல்லூரியில்  நாங்க எழுதிய முதல் டெஸ்டை மறக்கவே முடியாது.அதை  நடத்திய பெருமை எங்க professor  கைலாசம் ஜெகநாதன் சாரை  சேரும்.

ஜெகநாதன் சார் பத்தி என்னோட பதிவுகளில் அதிகம் அதிகம் இருக்கும்.. காரணம் அவர் கற்பிக்கும்  சப்ஜெக்ட்ஸ் முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை. இருப்பதால்.இன்னொரு அடிஷனல் தகவல் நான் அவரைப்போல மிமிக்ரி செஞ்சு மாட்டிக்கிட்ட  நிகழ்வும் இருக்கு..அது அடுத்து சொல்றேன்

  பரபரப்பான அந்த தேர்வு ஆரம்பிக்கும் முன்  ஜெகநாதன் சார் ஒரு தடாலடி அறிவிப்பு குடுத்தார்...

                      டெஸ்ட் எழுதும் முறையில் ஒரு புதுமை .

1)கேள்விகளுக்கு புக் பார்க்காமல் எழுதும் மாணவர்கள் வலது புறமும்
                                                              &
2)புக்கை பார்த்து எழுதும் மாணவர்கள் இடது புறமுமாக அமர்ந்து தேர்வு எழுதணுமாம்

இது என்னடா புதுசா இருக்கு.. வியப்பில் ஒருவருக்கொருவர் பார்த்துகொண்ட வேளையில்....

"தேர்வை பார்த்தும் எழுதலாம் பார்க்காமலும் எழுதலாம் " yes copying is officialy allowed ONLY  for this test  என்றார்...

கட்டளை வந்த பின்    முதல் ஆளா  நான் போய் லெப்ட் பக்கம் உட்கார்ந்துட்டேன்.








நான் போனத பார்த்து என்னோடு சேர்ந்து கழக கண்மணிகளும் சுமார் இருபது பேர்  சேர்ந்துட்டாங்க. .வேற எதுக்கு திறந்த முறை தேர்வு எழுத தான்!

எங்க கிளாஸ் பொண்ணுங்க அல்மோஸ்ட் வலதுபக்கம் அமர்ந்து closed book test எழுதிட்டு இருந்தாங்க.

.3 தைரிய லட்சுமிகள் மட்டும் எங்களோடு திறந்த முறை தேர்வு எழுதினாங்க.


         எழுதினோம்.. எழுதினோம் எழுதினோம்..

இதில்  LEFT சைடு மக்களாகிய எங்களுக்கு கூடுதல் சுமை கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  புத்தகங்களின் பக்கங்களை புரட்டி புரட்டி தேடி தேடி பதிலை கண்டுபிடித்து எழுதுவதாகும்..

ஒரு வழியா அந்த 45 மினிட்ஸ் டெஸ்டை வெற்றிகரமாக எழுதி முடிச்சோம்...
அட பிட் அடிப்பதை விட கொடியது புத்தகத்தில் தேடி எழுதுவது....


அதுவும் மெடிக்கல் புக்ஸ் சொல்லவா வேணும் ? (அவசரத்துக்கு வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு கட்டிலாக கூட சமயத்தில் பயன் படுத்திரலாம் அம்புட்டு பெரிய சைஸ்)



தேர்வு முடிவுகள் மறுநாள் நோடீஸ் போர்டில் ஒட்டப்பட்டு இருந்தது... அப்போ தான் தெரிசுச்சு இடது புறத்தில் அமர்ந்து திறந்த முறை தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் நெகடிவ் மார்க்ஸ்...
  -72
  -65
-42
-34
அனைத்தும் பூஜ்ஜியத்தை விட குறைவான மதிப்பெண்கள் !..


இம்புட்டு நடந்தும் எங்க மனச தேத்திகிட்டோம் காரணம் எங்க தொலைநோக்கு செயல் திட்டம் இது தான்...
 




 



Thursday, 31 May 2012

கிளாஸ் அட்டேன்ஷன்

ஒருவழியாக நாங்களும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டோம் . சராசரி மருத்துவ கல்லூரி மாணவர்களாக. வெள்ளை கோட் எஜமான் ரஜினி ஸ்டைலில் தோளில் போட்டுகொள்வதும் வித விதமான காட்டன் ஷர்ட்டுகள் அணிவதுமாக உலாவந்து கொண்டு இருந்தோம்.
எங்க காலேஜுல ஜீன்ஸ் அணிவதற்கு தடை. .

இவ்வளவு நாள் சீனியர்களுடன் 
கம்பைன்ட் கிளாஸ் போன  நாங்கள் அன்று முதல் எங்க batchக்குமட்டும் தனி வகுப்புகள். இப்போ தான் ஓரளவுக்கு யாரெல்லாம் எங்க கிளாஸ் பொண்ணுங்க என்ற விபரங்கள் தெரிந்தது.. 

வகுப்பில் நான் ரொம்ப அட்டன்டிவா இருப்பது வகுப்பு அட்டன்டன்ஸ் எடுக்கும் போது தான். அப்போ தானே சக மாணவர்கள் குறிப்பாக மாணவிகளின் பெயர் அறிமுகமாகும் .. இதெல்லாம் பேர் தெரிஞ்சுக்கிற வரைக்கும் தான்..அதுக்கப்புறமா அட்டன்டன்ஸ் எடுக்கும்போது நண்பர்களின் ப்ராக்சி தான் கைகொடுக்கும். 

அபிராமி.. அழகப்பன்.. அருணா.. இப்படி ஆரம்பிக்கும் அட்டன்டன்ஸ் ... மாணவர்களின் பெயரைவிட மாணவிகளில் பெயர்களை மனசுல ஏத்திகிட்டேன். 

அன்றைய அனாட்டமி வகுப்பு.. எல்லாரும் சீரியஸா கவனிச்சுட்டு இருந்தோம்.. அனாட்டமி லேபில் பிளந்து வைக்கப்பட்ட மனித தலை மற்றும் கழுத்து வரையிலான பாடம் (head and neck anatomy). நல்லவேளை காலேஜிலேயே " கெடவர்" எனப்படும் பதப்படுத்தப்பட்ட  மனிதஉடல்கள்    போதுமான அளவு இருந்துச்சு. வசூல் ராஜா படத்தில் வருவது போல பாடியை தேடி கொண்டு வாங்கடா என்ற வேலை எங்களுக்கு இல்லை.

லேப் முடிந்த உடன் தியரி வகுப்பு.. அருகே அமர்ந்திருந்த நண்பன் லெக்சரர் நடத்தும் பாடத்தை விட வேகமாக நோட்ஸ் எடுத்து கொண்டு இருந்தான்.. அடடா இவன் எடுக்கும் நோட்ஸ் நமக்கு போதும்..நாம வேற எதுக்கு தனியா நோட்ஸ் எடுத்துட்டு என்ற வகையில் நான் வகுப்பை கவனிச்சுட்டு இருந்தேன் 

கிளாஸ் முடிஞ்சவுடன் அந்த சக மாணவனிடம் அறிமுகம் ஆகிக்கொண்டு பேசினேன் .."மாமா நீ எழுதுன நோட்ஸ் எனக்கு குடுடா என்று.. '' அவன் லியோனி ஸ்டைலில் சிரிச்சுட்டே சொன்னான் நீ லவ் பண்றப்போ இது பயன்படும் இப்போ தேவை இல்லை ன்னு சொன்னான். .. அப்படி என்னடா நோட்ஸ் எடுத்தான் என்று பார்த்தால்  அன்புள்ள என்னவளுக்கு மாமன் ஜவஹர் எழுதிகொள்வது இங்கு நீ நலம் அங்கு நான் நலமா ..
 
ஊரில் உள்ள அவன் காதலிக்கு லவ்வு லெட்டர் எழுதிருக்கான் பக்கி..

...அடுத்த பதிவில் இன்னும் நெறைய விஷயங்கள் இருக்கு..
இப்படிக்கு
 உங்களில் ஒருவன்  நான்



  @riyazdentist  

Wednesday, 23 May 2012

இப்போ இல்லாட்டி எப்போ ..

கல்லூரி நினைவுகளின் தொடர் பயணம் இன்னும் நீண்டு  கொண்டே போகும்.. எல்லாத்தையும் முடிந்தவரை என்னோட ப்ளாகில் கிறுக்கி தள்ளிடலாம் என்ற  முடிவோடு இன்றைய பதிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் நண்பர்களே.
 


சீனியர்ஸுக்கு எக்ஸாம் நடக்கும்போது   தான் நாங்க  எல்லா ராக்கிங்  பிரச்சனைகளில் இருந்து விடுதலை ஆனோம். அதுவரை நாங்க யாரும் ஸ்டைலா டிரஸ் பண்ண கூடாது.. எண்ணெய் வழியும் தலையோடு வளிச்சு சீவி தான் காலேஜுக்கு போவனும். எங்க கிளாஸ் பொண்ணுங்ககிட்ட கூட சகஜமா பேச முடியாது.. இது எல்லாத்துக்கும் மேல டக் இன் செய்து ஷூ போட கூடாது.. 

வெறும் ஹவாய் ஸ்லிப்பர்ஸ் மட்டுமே போடணும்..


பொண்ணுங்களுக்கு ராக்கிங் வேறு விதமாக இருக்குமாம்.  உடை விஷயத்தில் சல்வார் தவிர வேறு எதுவும் அணிய கூடாது.. இதுதான் அவங்க டிரஸ் கோடு..




ஒருவழியாக அன்று ராக்கிங்குக்கு விடுதலை கிடைத்த நாள்.. அப்பாடா. கஷ்டப்பட்டு காலேஜ் அட்மிஷன் கிடைத்த நாள் வித விதமாக ஷாபிங் செஞ்ச டிரஸ் மற்றும் ஷூஸ் ஒருவழியாக ரெண்டு மாசம் கழிச்சு பெட்டியில் இருந்து எடுத்து  ஹாஸ்டல் ரூம் அலமாரியில் அடுக்கி வச்சு அழகு பார்த்தேன்



காலேஜ் சேர்ந்த முதல்நாளே  ஒரு பொண்ண சைட் அடிச்சுட்டு இருந்தேன்.. (அவ பேரு " மா" என்று முடியும்) அவளிடம் எனக்கு பிடித்ததே அவளின் புன்னகையும் அவள் அணியும் அழகிய காட்டன் சுடிதார்கள் தான்..அவ என்ன கலர்ல டிரஸ் பண்ணிட்டு வராளோ அதுக்கு மேட்சிங்கா  நானும்  டிரஸ் பண்ணலாம் என்ற ஆவலுடன் மறுநாள் விடிந்தது..


டேஸ்காலரான அவள் காலேஜ் பஸ்ஸில் வரும் சமயம் கவனிச்சேன்... அன்னைக்கு அவள் அணிந்தது  வாடாமல்லி நிற சல்வார்..

.போச்சுடா. இந்த கலர்ல எனக்கு சட்டையே இல்லையே... முதல் முயற்சி வழக்கம் போல பல்பில் முடிந்தது... சரி இருக்கும் நல்ல ஷர்ட் போட்டுட்டு போயி  கலக்கலாம் என்று போனேன்.



அன்று எங்க பேட்ச் மாணவர்கள் எல்லாம் புத்தாடைகளுடன் புது காஸ்டியுமோடு கலக்கிட்டாங்க.. நானும் தான்..ஆனால் வாடாமல்லி கலர் சட்டை இல்லையே...

சேம் பின்ச் சான்ஸ் மிஸ் ஆயிடுச்சு 
 




  இருந்தாலும் தன்னம்பிக்கை..அவளை பார்த்துடன் அவளின் ட்ரேட் மார்க் புன்னகையை உதிர்த்தாள்.  ஹாய் சொன்னேன்.. பதிலுக்கு அவளும் ஹாய் என்றாள்..இப்படி ஆரம்பித்தது எங்கள் நட்பு.. சரி இந்த போஸ்ட் இதோட முடிச்சுக்கிறேன்..

உடனே அவளுக்கு போன் செஞ்சு பேசனும்ன்னு தோனுது ..அவ்வ்வ்


அடுத்த பதிவில்  இன்னும் எழுதுறேன் நெறையா ..

Tuesday, 22 May 2012

அன்பு நண்பர்களே.. பழைய பதிவுக்கும் இதுக்கும் சுமார் 5மாச இடைவெளி... சரி விஷயத்துக்கு வரேன்..

 முதல் ஆண்டு மாணவர்களாக அடியெடுத்து வச்ச நாங்க எப்படியோ  ராக்கிங்கில் இருந்து மீண்டு வர ஒரு மாசம் ஆச்சு. என்னதான்  கடினமான  ரூல்ஸ் இருந்தாலும் ராக்கிங் என்பது வரம்பு மீறப்படாத மரபாகவே இன்னும் பல கல்லூரிகளில் இருக்கிறது. எங்கள் சீனியர்கள் தங்களின்  பரீட்சை நெருங்கும் நேரம் பார்த்து எங்கள ராக்கிங்ல இருந்து விடுதலை செஞ்சுருவாங்க .  ஒவ்வொரு வருஷமும் இது தான் நடக்கும்.


சீனியர்ஸ் கடைசியா ராக்கிங் செஞ்சத இன்னும் எங்களால மறக்கவே முடியாது.. ஹாஸ்டலில் உள்ள அனைத்து  ஜுனியர்களையும்
கும்பலாக சினிமாவுக்கு கூப்டுட்டு  போனாங்க.. ஆனா ஒரு கண்டிஷன்.. சீனியர்ஸ் சொல்லும் சீன்களில் நாங்க எல்லோரும் ஆரவாரம் செய்து விசில் அடிக்கவேண்டும்..சூப்பர் !  சூப்பர்! ஒன்ஸ் மோர் என்று கத்த வேண்டும். இது தான் டீல்.

சரி என்று ஒப்புக்கொண்டு இரவு 10 மணி ஷோவுக்கு போனோம்.  பழைய தியேட்டர். வாசல் வரை  போன பின்னாடி தான் தெரிஞ்சுச்சு  அது அஜால் குஜால் படம் என்று! ..மொத்தம் 27 டிக்கட்..கும்பலா உள்ளே நுழைந்தோம்.. போகும்போதே எங்க சீனியர்ஸ் கையில் கிழிக்கப்பட்ட காகிதங்களை எல்லாரிடமும் குடுத்துட்டாங்க.. அதிரடி பைட் சீன் ? ! வரும்போது கிழித்த காகிதங்களை மேலே வீசி ஆரவாரம் செய்ய..

எங்களுடன் வந்த நண்பர்களில் ஒருவர் சற்றே சலித்து  கொண்டார்..இந்த படத்த நானும் எத்தனதடவ தான் பாக்குறது..அட.. ச்சே..

தியேட்டரில் கூட்டம் அதிகமாக இல்லாவிட்டாலும் ஆங்காங்கே மிட் நைட் மசாலா  ரசிக பெருமக்கள் அமர்ந்து இருந்தார்கள்.
படம் போட்ட மறுநிமிஷம் நாங்க எல்லாரும் ரஜினி பட ஓபனிங் எப்பக்ட் கொடுக்க ஆரம்பிச்சோம்.

 உக்கார்ந்து இருந்த ஒருத்தனுக்கும் ஒன்னும் புரியல. ஒரு நிமிஷம் குழப்பத்தில் யோசிக்க ஆரம்பிச்சுடானுங்க  ..இது மலையாளப்படமா இல்லை  தமிழ் படமா என்று..

 முதல் அரைமணி நேரமும் புரியாத  வசனங்களும்வெளங்காத
செண்டிமென்ட்டுக்களும் ஓடி கொண்டு இருந்தது ..அடுத்து தான் அனைவரும் எதிர்பார்த்த காட்சிகள்.!!

.லெஷிமிபதி வாயா வாயா என்று நாங்க எல்லாரும் கத்த......

எங்களோடு வந்த மாணவர்கள்  காகிதங்களை மேலே வீசி எறியவும் விசில் பறக்கவும் செய்தனர்.. ஒவ்வொரு சீனுக்கும் வித விதமான விசில்கள் பறந்தன.. 

 சுத்தி உட்கார்ந்து இருந்தமிட்நைட் மசாலா ரசிகர்கள்
சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நெளிந்து கொண்டு இருந்தார்கள்.. ஒரு வழியா இன்டர்வல் விட்டான்.

இன்டர்வலில் ஒரு பெரியவர் எங்களை நோக்கி சத்தம் போட்டார் நீங்க எல்லாம் படத்த பாக்க வந்தீங்களா இல்ல ....

எங்க கும்பலில் இருந்து ரைமிங்கா ஒரு கமன்டும் வந்துச்சு.. ..நீங்க மட்டும் என்ன....


ஐந்தே நிமிடத்தில் இன்டர்வல் முடிந்து மீண்டும் படம் துவங்க..மறுபடியும் சோகம் செண்டிமெண்ட் காட்சிகள்..

இங்கிருந்து ஒரு கூச்சல். படத்த போடுங்கடா. டேய் ....

மீண்டும் ஆரம்பமான சாகச காட்சிகளும் எங்களோட ஆரவார கூச்சல்களும் எங்க சீனியர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரிச்சு மொத்த படத்தையே நகைச்சுவை படமா மாத்திட்டோம்..

இதுவரை இப்படி ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் நாங்க பார்த்ததே இல்லைன்னு சொல்லுற அளவுக்கு எல்லாம் அசத்திட்டோம்..
படம் முடிய 10 நிமிஷம் இருகிறப்பவே இருட்டில் யார் கண்ணுலபடாம
கும்பலா எந்திரிச்சு தியேட்டர் விட்டு எஸ்கேப்ப் ஆயிட்டோம் .....

 

Friday, 27 January 2012

ஒரு ஐடியா உங்களை மாற்றிடுமே WHAT AN IDEA




கல்லூரி நாட்களில் வாரத்தில் இரு முறையாவது வீட்டுக்கு போன் பண்ணிடனும் அப்போ தான் மனசு கொஞ்சம் ஆறுதலா இருக்கும் . அப்போ எல்லாம் எங்க காலேஜ் ஹாஸ்டல்ல மொபைல் போன் கண்டிப்பா வச்சிருக்க கூடாது. கண்டுபிடிச்சா மொபைல் போன பறிமுதல் செஞ்சுருவாங்க. முதல் வருஷம்.ஹ்ம்ம். எதுக்கு ரிஸ்க் என்று எங்களிடம் இல்லை..ஏதோ இந்த days ஸ்காலர் பசங்க மட்டும் வச்சுருப்பாங்க.எங்க காலேஜ் ஹாஸ்டல் இருக்கும் இடமோ உத்தண்டி-கிழக்கு கடற்கரைசாலை .எல்லாரும் அந்த பக்கம் இருக்கும் கானத்தூர் நோக்கி தான் போன் செய்ய போவாங்க .நானும் என் நண்பன் GJயும் வழக்கத்துக்கு மாறாக சீனியர்களின் தொந்தரவில் இருந்து தப்பிக்க வேறு ஒரு பக்கமாக போனோம்.
சாலையின் வளைவில் ஒரு பங்களா இருந்துச்சு.. வாசலில் ஒருவர் கம்பீரமாக தொடை தெரியும் அளவுக்கு வேஷ்டிகட்டி கொண்டு சுருட்டு பிடிச்சுட்டு ஒய்யாரமா உட்கார்ந்து இருந்தார்.எங்களை பார்த்த மறுநிமிடம் கேட்டார் "என்ன தம்பிகளா இந்த பக்கமா போறீங்க" ?
அதுக்கு பவ்யமா பதில் சொன்னோனம்
"இல்லைங்க இங்கே பப்ளிக் போன் பூத் எங்கே என்று தேடிட்டு வந்தோம் என்றோம்"

நல்லமனசுக்காரர் அவரோ "வாங்க தம்பி என் வீட்டில் போன் இருக்கு லோக்கல் தானே பண்ணிக்குங்க அங்கே குடுக்கும் காசை என்கிட்டே குடுங்க" என்றார்.(பார்ட் டைமா சில்லறை சம்பாரிக்கும் ஆசையில் )

முதலில் என் நண்பன் GJ திருவான்மியூரில் உள்ள தன்னுடைய மாமா வீட்டுக்கு ஒரு உள்ளூர் அழைப்பை செய்து பேசினான். 5 நிமிடங்கள் பேசியதற்கு தோராயமாக ஐந்து ருபாய் கொடுத்தான்.
அடுத்து நான் .உள்ளூரில் பேச யாரும் இல்லை.ஹ்ம்ம். சரி STDகால் போட்டு ஊருக்கு பேசித்தான் பார்ப்போமே. லோகல் காலா STDகாலா என்று அந்த "தொடை ஆசாமி" மீட்டார் இருந்தால் தானே பார்க்கமுடியும் என்ற தைரியத்தில் வெளியூர் அழைப்பை போட்டேன்.STD லாக் அல்லாத தொலைபேசி இணைப்பு என்பதால் உடனே லைன் கிடைத்தது. பத்து நிமிஷம் தாராளமாக பேசினேன்.


.




மறுமுனையில் எங்க அம்மா ""டேய் என்ன ஆச்சு உனக்கு இவ்வவளவு நேரம் STDஅழைப்பில் பேசுறே என்று ஆச்சரியமான குரலில்.
ஆமாம் மம்மி நான் உத்தண்டியில் இருந்து தான் பேசுறேன். (சென்னையில் என்று சொன்னால் பேசும் கால் வெளியூர் கால் என்று அந்த தொடை ஆசாமி கண்டுபிடித்து விடுவார் என்பதால் இந்த டெக்னிக் ).
ஆசைதீர பேசிட்டு லோகல் கால் காசு குடுத்துட்டு நானும் நண்பன் GJயும் ரொம்ப சந்தோஷமா ஹாஸ்டல் திரும்பி வந்தோம்.
எங்களிடம் விசாரித்து அந்த தொடை ஆசாமி பங்களாவுக்கு படையெடுத்து பலர் கால் செய்ய ஆரம்பித்தார்கள்.நாட்கள் நகர்ந்தன ...
அடுத்த மாசம் அந்த வீட்டை கடந்து போகும் போது அந்த "தொடை ஆசாமியை" நானும் நண்பன் GJயும் கவனித்து விழுந்து விழுந்து சிரித்தோம்.
காரணம் அந்த தொடை ஆசாமி வழக்கமாக உட்காரும் ஸ்டைலில் ஒரு சிறிய மாற்றம். தலையில் ஒரு துண்டு போட்டு கொண்டு உட்கார்ந்து இருந்தார்.
எல்லாம் பி .எஸ் .என். எல் பில் வந்த விளைவோ ..
இன்னும் பல கல்லூரி கலாட்டா நினைவுகள் தொடரும் ....

Friday, 20 January 2012

எழுதுகிறேன். தொடர்ந்து எழுதுவேன் .

கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகிவிற்றது என் முந்தைய பதிப்பு எழுதி. நீண்ட இடைவெளி. காரணங்களை சொல்லி இந்த இடத்தை வார்த்தைகளால் நிரப்புவதை விட நேரடியாக பதிவுக்கு வர்றேன்..
இப்போது ப்ளாக் எழுதுவது மேலும் எளிமையாகிவிட்டது காரணம் நான் வைத்திருக்கும் ஐபோன் கைபேசியிலே Blogger application மூலம் நேரடியாக பதிவை எழுதலாம்..
"நினைவுகளோடு நான்" என்ற பெயரில் என் கிறுக்கல்கள் தொடரும்.
கல்லூரி நினைவுகள், நிகழ்வுகளை தாண்டி நடப்பு சம்பவங்களும் என்னுடைய பதிவில் இருக்கும்.
என்னுடைய எழுத்து நடையிலும், பதியும் முறையிலும் உள்ள நிறை குறைகளை நண்பர்களாகிய நீங்கள் எடுத்து சொல்லலாமே..
முன்னர் விட்ட பெரிய இடைவெளியை நிரப்ப இந்த பதிவு ஒரு சிறிய பதிவு தான்..
நினைவுகள் தொடரும்

Thursday, 18 August 2011

நினைவோ ஒரு பறவை ..




கல்லூரி நினைவுகளின் தொடர்ச்சி

நீண்ட நாட்கள் இடைவேளைக்கு பின் வலைபதிவு செய்கிறேன். காரணம் தொடர்ச்சியான வேலை மற்றும் ரமலான் மாதம் துவங்கிவிட்டதால் நோன்பு,வைத்த அசதியில் இரவில் சீக்கிரமே தூங்கிவிடுகிறேன் .இருப்பினும் நண்பர் அறிவுக்கரசு(@arivukkarasu ) போன்றவர்களின் உற்சாகத்தால் நான் எப்படியாவது இன்று வலைபதியவேண்டும் என நேரம் கிடைத்த தருணத்தில் பதிகிறேன்.

ஒருவழியாக கவுன்செல்லிங்கில் கஷ்டப்பட்டு பல்மருத்துவ படிப்பு கிடைத்ததை மனசுக்குள் ஒரு பெரும் சாதனையாக நினைத்து சந்தோஷப்பட்டாலும் மறுபுறம் ஒரு நீண்ட விடுமுறைக்கு பின் வீட்டை பிரிந்து இருப்பது ஒருபுறம் கஷ்டமாக தான் இருந்தது.

விடுதியில் எல்லாரையும் நானாக சந்தித்து அறிமுகம் செய்து விட்டு அன்றே ஒரு வட்டமேசை மாநாடு நடத்தினோம் .
எங்கள் வட்ட மேசை மாநாட்டின் முதல் தீர்மானமே ராகிங் முடியும் வரை எங்கே போனாலும் ஒன்றாக தான் போகவேண்டும் என்பது தான் . பெரும்பாலும் என்னோடு ஹாஸ்டலில் தங்கிருந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் தென் மாவட்ட பகுதியை சார்ந்தவர்கள் என்பதால் அனைவரும் எளிதில் பழகிவிட்டோம்.
நாங்கள் மொத்தம் 12 பேர். கரூர்,கும்பகோணம் ராஜபாளையம், பெரியகுளம் மதுரை,கோவை , திருநெல்வேலி என வெவ்வேறு ஊரை சார்ந்தவர்கள் .
ராகிங் தொல்லை தடுக்க முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தனி உணவு நேரம் என்று அறிவிப்பு பலகையில் இருந்ததை கண்டு சந்தோஷத்துடன் 12 பேரும் ஒன்றாக ஹாஸ்டல் உணவகத்திற்கு போனோம்.
எங்களுடன் முதல் வகுப்பு மாணவிகளும் உணவகத்திற்கு மதிய உணவு சாப்பிட வந்தார்கள். அறிமுகம் இல்லாவிட்டாலும் இவர்கள் தான் எங்களோடு 5வருடம் குப்பை கொட்ட போகிறவர்கள் என்ற வகையில் முதல் நாளே ஒருவருக்கொருவர் சிரித்த முகத்துடன் ஒரு HI சொல்லிகொண்டோம்.
முதல் நாள் உணவகத்தில் சமையலோ பிரம்மாதம். எங்களோடு வந்த சில பெற்றோர்களும் மிகவும் சந்தோஷப்பட்டனர்." பரவாஇல்லையே சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கே" என சிலர் பாராட்டவும் செய்தார்கள். பாவம் அவர்களுக்கு தெரியாது அது முதல் நாள் முதல் வேளை அனைவரையும் திருப்திபடுத்த செய்யும் சதி என்று .நான் கல்லூரி சேர்ந்த நாள் முதல் கடைசியாக கல்லூரி விடுதி உணவகத்தில் சாப்பிட்ட நாள் வரை அந்த முதல் நாள் சாப்பிட்ட சாப்பாடு மட்டும் தான் சாப்பிடும்படியாக இருந்தது என்பது உண்மையிலும் உண்மை.
இன்னும் தொடரும் கல்லூரியின் நினைவுகள்
நினைவுகளோடு நான் உங்களில் ஒருவன் ..






@riyazdentist